Description
ஆகப்பெரிய வாழ்க்கைக்கு முயலாதவர்களை வாழத் தகுதியற்றவர்களென ஒதுக்க முயல்கிறது சமூகம். அத்தகையவர்களுக்கு மதத்தின் கோட்பாடுகளை உயிர் மூச்சாக்கிக் கொடுத்து மெல்லமெல்ல அவர்தம் உழைப்பையும் ரத்தத்தையும் தமக்கென ஆக்கிக் கொள்கிறவர்களைக் கண்சிவக்க நோக்குகிறார் தோப்பில். மடித்துப் போடப்பட்டிருக்கிற வாழ்க்கையை நிமிர்த்துவதற்குள் தாம் எவற்றையெல்லாம் இழக்கிறோமென அறிந்துகொள்ள விரும்பாத மனிதர்களிடமிருந்தே சமூகத்திற்கான ஊட்டச் சத்து கிடைக்கின்றது. இத்தகைய வரம்புகளுக்குள்ளேயே நின்று இம்மக்கள் மேற்கொள்கின்ற யத்தனங்களுக்குள் நம் குருதியோட்டமும் கலந்துவிடுகிற மாதிரி தோப்பில் முஹம்மது மீரானின் கலையாற்றல் மேம்பட்டிருக்கிறது. அதனால்தான் நாம் இம்மனிதர்களைப் பிரிந்துவிடாமல் அவர்களின் பக்கமாய் நிற்க விரும்புகிறோம். -களந்தை பீர் முகம்மது
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.