Description
வாழ்வின் மர்மங்களைத் தேடித் தேடி அதிலாழ்ந்து கண்டடைய எல்லோரையும் விட எழுதுபவனுக்குச் சாத்தியப்படுகிறது. நினைவுகளை மீட்டுதலும் அதில் ஆழ்ந்து போவதும் வாழ்க்கையில் கடந்து வந்ததைத் திரும்பப் பார்ப்பதான அனுபவங்களை கதைகள் வாசிப்பவர்களுக்குத் தருகின்றன. அவ்வகையில் பாளை கோ. மாணிக்கத்தின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு வாழ்வு நெடுக அவர் கடந்து வந்த பாதைகளின், சந்தித்த நபர்களின், எதிர்கொள்ள நேரிட்ட சந்தர்ப்பங்களை, இன்ப துன்பங்களைத் திரும்பப் பார்க்கிற ஒரு தொகுப்பாக இருக்கிறது. ஒரே வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கிறது. ஒரு நாட்குறிப்பேட்டின் பக்கங்களைப் போல ஒரு வாழ்க்கையின் பலதரப்பட்ட பக்கங்கள் திரும்பப் புரட்டிப் பார்க்கிற அவதானிப்புகளைத் தருகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.