கோயில் வெறும் இறைவன், இறைவழிபாடு சார்ந்ததாக மட்டும் இல்லை! துன்பப்படும் மக்களுக்கு ஆறுதல் தரும் நிவாரணியாகவும் மகிழ்ச்சியோடு இருப்பவர்களுக்கு, “இந்த மங்களகரமான வாழ்க்கை கடவுள் போட்டபிச்சை” என்று நம்புகிறவர்களுக்கு சுகவாசஸ்தலமாகவும் இருக்கிறது. இதை விளக்கத்தான் மார்க்ஸ் இவ்வாறு கூறினார்: “மதம் ஒடுக்கப்பட்டவர்களின் பெருமூச்சு. இதயமில்லா உலகத்தின் இதயம், ஆன்மா இல்லாத நிலையில் ஆன்மா. மதம் மக்களுக்கு அபின் போன்றது. கோயிலும் மதமும் சமூகத்தில் தனியாக இல்லை. அவையே சமூகமாகவும் இருக்கின்றன. அந்தச் சமூகமோ பொருளாதாரப் பின்னணியில் இயங்குகின்றது! அதனால்தான் கோயிலும், மதமும் வெல்வதற்குக் கடினமானதாய் இருக்கின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.