Description
சங்க காலத்திலிருந்து தொகுப்பைக் கலையாகப் பேணும் மரபு நம்முடையது என மார்தட்டுகிறோம். ஒவ்வோர் ஆண்டும் ஒருபொருள் தொடர்பாக வெளியான கட்டுரைகளைக் காட்டும் பட்டியல்கூட நம்மிடமில்லை. இத்தகைய இல்லாமைகளை உணர்ந்து அவற்றை நிறைவு செய்ய முனையும் தனிமனித ஆர்வங்கள் அவ்வப்போது சில நற்செயல்களை நிகழ்த்திவிடுவதுண்டு. அவ்வகையான நற்செயலாகச் சிறுகதை தொடர்பான பல ஆவணங்களையும் கட்டுரைகளையும் வாசித்துச் சுப்பிரமணி இரமேஷ் இந்நூலை உருவாக்கியுள்ளார். சிறுகதை வரலாற்றை அறிவதற்கோர் கருவியாக விளங்கும் தன்மை பெற்றுள்ளதோடு, அதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் உந்துதலையும் இந்நூல் வழங்கும் என நம்புகிறேன்.
– பெருமாள்முருகன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.