Description
“சம வேலைக்கு சம ஊதியம்” என்ற நியாயத்தை முதலாளி வர்க்கம் மறுத்தது. அரசும் மறுத்துவிட்டது. நீதிமன்றங்கள் மறந்து விட்டன. தொழிலாளி வர்க்கம் ஏன் மறந்தது?
பத்துப் பனிரெண்டு ஆண்டுகள் கசக்கிப் பிழிந்து வெளியேற்றப்படும் ஒரு காண்டிராக்ட் தொழிலாளி, அதன்பின் எப்படி உயிர்வாழ்வான் என்ற கவலை, முதலாளிக்குக் கிடையாது என்பதை நாம் அறிவோம். அத்தகைய அக்கறை, சக தொழிலாளிக்கும் இல்லை என்ற நிலையைத்தானே நாம் காண்கிறோம். காண்டிராக்ட் தொழிலாளி என்றால் இத்தகைய அநீதிகளுக்கு ஆளாவது இயற்கை என்றும், அவர்கள் பணி நிரந்தரம் பெறுவதற்கெல்லாம் இன்றைய சூழலில் வாய்ப்பே இல்லை என்றும் சமூக அக்கறை கொண்டவர்களான நிரந்தர ஊழியர்களே கூட மனதளவில் சமாதானம் கொள்கின்ற நிலையை எட்டிவிட்டோம்.
சாதி ஏற்றத்தாழ்வு பழகியது போல இந்த அநீதிகளும் பழகி விட்டன.
– மருதையன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.