Description
பாகிஸ்தானின் உளவு ஏஜென்சியான ISI குறித்த விரிவான அறிமுகத்தைத் தருகிறது இந்நூல்.
பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பின் இருப்பும் செயல்பாடுகளும் இன்றளவும் மர்மமானவையே. இந்தியாவில் நிகழும் எந்த ஒரு பயங்கரவாதச் செயலும் ஐ.எஸ்.ஐயுடன் தொடர்புடையதாக நமக்கு முதலில் சொல்லப்படுவதைக் கொண்டு அதை ஓர் இந்திய பயங்கரவாத அமைப்பாகவே எண்ணுபவர்கள் பலர். உண்மையில், ஐ.எஸ்.ஐயின் கரங்கள் இந்தியாவுக்கு அப்பாலும் நீள்பவை.
ஆள் கடத்தல், அரசியல் படுகொலைகள், குண்டு வைப்பு நடவடிக்கைகள், சிறு யுத்தங்கள், அரசியல் சூழ்ச்சிகள், இனக் கலவரங்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள் – இவை அனைத்து உளவு அமைப்புகளுக்கும் பொதுவான செயல்பாடுகளே என்றாலும் ஐ.எஸ்.ஐ இவற்றை மேற்கொள்ளும் விதம் முற்றிலும் வேறு. ஏராளமான வெற்றிகள், அதைவிட அதிகமான தோல்விகள். ஆனால் தன்னைக் குறித்த ஒரு நிரந்தர அச்சத்தை அண்டை நாடுகளில் உருவாக்கி வைத்திருப்பது ஐ.எஸ்.ஐயின் தனித்த சாதனை.
இண்டர் சர்வீஸ் இண்டலிஜென்ஸ் குறித்து இந்தளவு விரிவான அறிமுகத்தைத் தரும் இன்னொரு நூல் தமிழில் கிடையாது. ஐ.எஸ்.ஐயின் செயல்பாடுகள் வழியே அந்த அமைப்பின் குணத்தை, நோக்கத்தைப் புரிய வைப்பதில் இந்நூல் பெருவெற்றி பெறுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.