Description
வகை நிகழ்காலத் தமிழ் வாழ்வில் நாம் உணரும் முரண்பாடுகள் பலவிதமானவை. சில முரண்கள் தற்காலிகத் தன்மை கொண்டவை; சில முரண்கள் நிரந்தரத் தன்மை கொண்டவை. விரிந்த எல்லைப் பரப்பு தேவைப் படாததாகவும் உடனடி வெளிப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும் தற்காலிக முரண்பாடுகள்,பொருளாதார அடித்தளத்தோடு நெருக்கம் கொண்டனவாக இருக்கின்றன. ஆனால் நிரந்தரமான முரண்பாடுகள் எல்லா நேரத்திலும் பொருளாதார அடித்தளத்தோடு நேரடித் தொடர்புடையனவாகக் காட்டிக்கொள்வதில்லை. அதற்கு மாறாகப் பண்பாட்டியல் அடையாளங்களோடு உறவு கொண்டனவாகக் காட்டிக்கொள்கின்றன.
சிந்திப்பவர்களாகக் கருதிக்கொள்ளும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் கருத்தியல் அடியோட்டத்தில் தீர்மானகரமான ஒரு முரணாக பிராமணர் x பிராமணர் அல்லாதார் என்ற முரணிலை இருந்துகொண்டே இருக்கிறது. பிராமணர் x பிராமணரல்லாதார் முரண்பாடு போலவே தமிழர் x வட இந்தியர்; தமிழ்- பிறமொழி(யினர்), பெரும்பான்மையினர் x சிறுபான்மையினர் போன்ற முரண்பாடுகள் எல்லாம் இன்று தமிழகத்தில் தூக்கலாக இருக்கின்றன. சாதிக்கட்டுமானத்தைத் தகர்ப்பது என வெளிப்படையான நோக்கத்தோடு தொடங்கிய தலித் இயக்கங்கள் கடைசியில் தலித் x தலித் அல்லாதார் என்பதான முரண்பாட்டை உருவாக்கும் காரணிகள் நகர்வைக் கண்டடைந்துள்ளன. இத்தகைய முரணிலைகளை உள்வாங்கி விவாதப்புள்ளிகளை உருவாக்கி விவாதிக்கின்றன இக்கட்டுரைகள்.
– அ.ராமசாமி
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.