Description
வகைவகையான வடிவத் திரைகளில் ஓடி முடியும் திரைப்படங்களின் அடிப்படை நோக்கம் அப்படைப்பின் உள்ளர்த்தங்களும், வீச்சும், வீர்யமும் பார்வையாளர்களிடம் உண்டாக்கும் அதிர்வுகளாகக் கொள்ளலாம். காட்சி முடிந்ததும் கடந்து போவோர் மத்தியில் படைப்பின் நுணுக்கங்களைப் பதிவதன் மூலம் படைப்பை அணுகும் முறையையும் பதிவு செய்ய வேண்டியது கடமையாகிறது. இந்நூலில் கண்ணியத்தோடு கடமை ஆற்றப்பட்டிருக்கிறது.
குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்களைப் பார்த்த பின்னர் இக்கட்டுரைகளை வாசிக்கையில் ஒருவித புரிதலையும், கட்டுரைகளை வாசித்தபின்னர் திரைப்படங்களைப் பார்க்கையில் வேறுவித புரிதலையும் கொடுக்கின்றன. அ.ராமசாமி அவர்களின் ஆழமான அறிவின் வழியாக, அனுபவங்களின் வழியாகத் திரைப்படைப்புகளை விளங்கிக் கொள்ள காட்டப்பட்டிருக்கும் வழிமுறைகளும் வெகுச் சிறப்பான கற்பித்தல் முறையெனக் கொள்ளலாம்.
வணிக சினிமா – இடைநிலை சினிமா – பெண்களின் சினிமா என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, காண்போர் வாசிப்பெனக் கட்டுரைகள் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன. திரைப்படைப்புகளைக் காணும் முன் வாசிக்க – கண்டபின் வாசிக்க என்ற அடிப்படை நிலைகளைத் தாண்டியும் இதில் வாசித்துத் தெளிய நிறைய இருக்கின்றன. காண்போருக்கு மட்டுமல்ல படைப்பாளருக்கும் படைப்பை அணுகுவோருக்கும் இக்கட்டுரைகள் சுருக்கக் கையேடுகள்.
– மதியழகன் சுப்பையா,
திரைப்பட இயக்குனர். மும்பை
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.