Description
காவியக் குந்தியை. அவளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் மீமானுடக் கதைகளிலிருந்து சற்று விடுவித்து. அவைகள் இல்லாமலும் இக்காலத்தின் பார்வையிலும் காலூன்றி நிற்க முடியும் என்ற நம்பிக்கையில் காவியத்தின் உண்மைக் கதாநாயகியான குந்தி என்ற மேன்மைத் தாய், இங்கே ஒரு நாவல் வடிவிலே பவனி வருகின்றாள். ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை அவள் தரக் காத்திருக்கிறாள். இந்தக் கால வார்த்தை களுக்கும், நடப்புக்கும். கற்பனைக்கும் குந்தி பொருந்திவருகிறாள். ஒரு புராண காலத்துப் பெண்ணை, தற்காலத்துப் பெண்ணாகச் சிலை வடிக்கும் சிற்பியைப் போன்று. காவியக் குந்தியை நாவலின் குந்தியாக வடிவ உருமாற்றும் உத்தி இங்கே நிகழ்ந்திருக்கிறது. ஆனாலும் அவளுடைய காவிய நிகர் அடிப்படைக் குணங்கள். பண்புகள், நெகிழ்வுகள், நேசங்கள், மனிதர்களை இயக்கும் பேராண்மை. நினைத்ததைச் சாதிக்கும் முனைப்பு, பெண்மையின் வலுவும் எழிலும் குறைவுபடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக உணருகிறேன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.