Description
திருமலைக்கு வாழ்க்கை என்பது மானுடர்க்கு கடவுள் வழங்கிய அற்புதமான வரம். அதை ஒளியாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று அவர் கண்டார். மகிழ்வான வாழ்வின் அடையாளமாக காந்திஜி திருமலைக்கு இருந்தார். காந்தியக் கொள்கைகளுக்குப் புதிய¬ விடியலைத் தந்தவர் திருமலை. உண்மையாலும், அன்பாலும்தான் நிஜமான மகிழ்ச்சியை அடைய முடியும் என்கிறார் திருமலை.
டாக்டர் . ஜி. ராமச்சந்திரன்
நிறுவநர் , காந்தி கிராமம்.
நம் நண்பரும் சகாவுமான திருமலையின் தியாகமும் சேவையும் இளைய தலைமுறையின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். நாட்டுச் சேவையில் அவர் சந்தித்த சோதனைகளையும் வேதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவை வளரும் தலைமுறைக்குப் பெரும் தூண்டுதலாக இருக்கும்.
கே. அருணாசலம்
தலைவர் , தேசிய காந்தி நினைவு நிதி
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.