Description
வாழ்வனுபவக் குறிப்புகள் இரண்டு வகைகளில் முக்கியமானவை. முதலாவது, அந்த வாழ்க்கையின் உன்னதத் தருணங்கள் அங்கே காட்சிகளாக விரிவது. அவை இலக்கியப் பெறுமதி கொண்டதாகவும் ஆகும். இரண்டாவது, அதன் வழியாக ஒரு வரலாறு பதிவு செய்யப்படுகிறது. ராகுல சாங்கிருத்யாயன், ஜிம் கார்பெட் ஆகியோரது எழுத்துகளை மேற்சொன்னவற்றுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். இந்நூலின் ஆசிரியர் 160 ஆண்டுகளாக இயங்கி வரும் சென்னை உயிரியல் பூங்காவின் 50 ஆண்டு கால வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். நினைவில் காடுள்ள மிருகங்களை அணுகும் விதம், அவற்றின் நடத்தைகள் குறித்தெல்லாம் நாம் அறிந்திராதவற்றைத் தன் அனுபவங்கள் வழியே பதிவு செய்திருக்கிறார். மற்ற விலங்குகள் மனித விலங்கை அணுகும் உளவியலும் இப்பதிவில் அடக்கம். இன்றைக்கு ஜன நெருக்கடியில் மூச்சுத் திணறும் சென்னையின் மையப்பகுதியில்தான் முன்பு உயிரியல் பூங்கா இருந்தது என்கிற அடிப்படைத் தகவலே புதியது. அக்காலகட்டத்தின் பேரிடர் சூழல், நேரு உள்ளிட்ட பெருந்தலைவர்களின் வருகை என் அப்பூங்காவின் அகம் மற்றும் புறச் சூழல்களை விளக்கி இன்னும் இன்னும் எனத் தன் அனுபவங்களை விரித்து வாசகனை உள்ளீர்த்துக் கொள்கிறார்.
– கி.ச.திலீபன் (எழுத்தாளர்/ஊடகவியலாளர்)
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.