எழுதித் தீராப் பக்கங்கள்
₹275 ₹261
- Author: செல்வம் அருளானந்தம்
- Category: சுயசரிதைகள், நாட்குறிப்புகள் மற்றும் உண்மை தரவுகள்
- Sub Category: மற்றவை
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2021
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9789390802692
Description
மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று – மண்ணின் மக்கள் வேரற்று அலைந்து புகலிடம் தேடியதுதான். காலூன்றிய நிலத்திலிருந்து பெயர்ந்து முற்றிலும் அந்நியமான இடங்களில் அவர்கள் தம்மை பதித்துக்கொண்டார்கள். அவ்வாறு நாட்டைவிட்டு வெளியேறிய ஈழத் தமிழர்களில் முதல் தலைமுறையின் பிரதிநிதிகளில் செல்வம் அருளானந்தமும் ஒருவர். ஈழத்திலிருந்து அகதியாக வெளியேறிய செல்வம் பாரீஸில் புகலிடம் தேடியவர். பின்னர் கனடாவில் புலம்பெயர்ந்தவரானார். இந்த மூன்று காலநிலைகளிலான தனது அனுபவங்களை மீள நினைவுகூர்வதே இந்த நூல். தன்னையும் தன்னைப் போன்ற வேர்பறிக்கப்பட்டவர்களின் பாடுகளையும் இந்த சுவிசேஷத்தில் வெளிப்படுத்துகிறார் செல்வம். நேற்றைய துயரங்களை இன்றைய வேடிக்கைகளாகப் பகிர்ந்துகொள்கிறார். நினைவுகளின் கசப்பையும் கண்ணீரின் உப்பையும் நகையுணர்வின் இனிப்போடு முன்வைக்கிறார். கூடவே யார் மீதும் பழிபோடாத செல்வத்தின் பேரிதயம் வேதனையைக் கடந்து மானுடத் தோழமையின் அமுதத்தைத் திரட்டி அளிக்கிறது. புனைவுகளை மிஞ்சிய ஈர்ப்பும் ஆவணங்களில் சிக்காத உண்மையின் வலுவும் ‘எழுதித் தீராப் பக்கங்க’ளை வரலாற்றின் மறுக்க முடியாத பக்கங்களாக்குகின்றன.
Be the first to review “எழுதித் தீராப் பக்கங்கள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.