Description
நட்பின் உச்சத்தில் எச்சிலின் சுவையறிந்து, உயிர்ப்பின் இரகசியம் மறைத்த,பிசுப்பிசுத்த நீர் ஒழுகும் யோனியின் மனம் வீசும் மூத்திரம்,உப்புகரிக்கும் இரத்த வாடையும்,கோரை பல்லிடுக்கில் துடிக்கும் சதையுமாக வாழ்வா? சாவா? என்று தொடரும் பேரச்சத்தினூடாக மானுட உரிமையை பேசுகிறது அணங்கு எனும் இந்நாவல். -மு.சந்திரகுமார் சமூக இலக்கிய தடத்தில் அவசியமானதொரு படைப்பாகவே நான் கருதுகிறேன் காரணம் இந்தியாவில் காலங்காலமாக சமூகவியலை அதன் சிக்கலை, அதன் சமமற்ற வளர்ச்சிப்போக்கை விதவிதமான கலாச்சார கரைசலை ஊற்றி உலகின் பொதுப் பார்வையிலிருந்து மறைத்து மானுட பண்பும், கலாச்சாரமுமற்ற மானுட பண்புக்கு முரணான பாரம்பரியங்களை உயர்த்தி பிடிக்கிற நிகழ்கால சமூகச்சூழலில் அணங்கு போன்ற படைப்புகள் அவசியமாகப்படுகிறது. -கரண் கார்க்கி கவித்துவமும் கருத்தும் செறிவுமாக அணங்கு தலைப்பில் தொடங்கி ஒவ்வொரு அத்தியாயத்திலும் கவினுறும் மொழிநடையில் ஆக்கப்பட்டது சிறப்பு. வாசகர் கதைக்குள் நேரடியாக களமிறங்கி கதாபாத்திரங்களில் பலவித அனுபவங்களுடன் பயணித்து இறுதியில் ஓரிடத்தில் திகைத்து நிற்கக்கூடும். – உமா ஷக்தி
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.