Description
துர்கா, அரசியல் குடும்பத்துக்கே உரிய தியாகத்தையும் பொறுப்பையும் கடமையையும் நிதானத்தையும் பெற்ற பெண்ணாக வளர்ந்தார். ‘அவரும் நானும்’ என்ற முதல் தொகுதியிலும், இந்த இரண்டாவது தொகுதியிலும் இதைத் தான் நீங்கள் பார்ப்பீர்கள்.
– மு.க ஸ்டாலின்.
‘அவரும் நானும்’ என்கிற இந்த நூல் எளிமையான, ஆரவாரமில்லாத அனுபவங்களின் பதிவு. நூலாசிரியரே சாட்சியாக நின்று அனைத்தையும் உற்றுப்பார்த்ததைப் போன்ற உணர்வுடன் எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பதிவுசெய்திருக்கும் இந்நூல் வாசகர்களுக்குப் பல சாளரங்களைத் திறந்துவிடும் பதிவுகளின் தொகுப்பு.
– வெ. இறையன்பு
திருமதி துர்கா ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவியாக மட்டுமின்றி சிறந்த குடும்ப தலைவியாக, மனித நேயம் கொண்ட மனுஷியாக, சமூக நலனில் அக்கறை கொண்ட நபராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதை ‘அவரும் நானும்’ என்ற தொடரின் இரண்டாம் பாகம் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
– சிவசங்கரி
ஒரு கட்சியின், ஒரு மாநிலத்தின், ஒரு குடும்பத்தின் தலைவராக கலைஞர் மீதும் அவரின் குடும்பத்தின் மீதும் அவர் கொண்டிருக்கும் பற்று அபரிமிதமானது. அதை அற்புதமாக இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். தனது கணவர் மீது அவர் வைத்திருக்கும் பெருமதிப்பும், அவரின் கடின உழைப்பு குறித்தும் ஆற்றியிருக்கும் சாதனைகள் பற்றியும் அவர் கொண்டிருக்கும் பெருமிதம் பல்வேறு அனுபவங்களின் வாயிலாக வெளிப்படுகிறது – மல்லிகா ஸ்ரீனிவாசன் எளிமையான மொழி நடை இந்நூலின் பலம். தமிழ்நாட்டு பெண் வாசகர்களை ஈர்த்திருப்பது இந்நூலின் வசீகரம். இந்த நூலை ஓர் அரசியல், குடும்ப ஆவணம் என்றே குறிப்பிடலாம்.
– தமிழச்சி தங்கபாண்டியன்
இந்த நூல் நம் காலத்தின் மகத்தான தலைவரின் கதை.அந்தத்தலைவரை அல்லும் பகலும் பாதுக்காத்து நிற்கும் ஒரு தமிழ்க்குடும்பத் தலைவியின் கதை. இது திராவிடக் குடும்பங்களின்கதை. அரசியல் புயல்கள் நடுவே அன்பின், ஆதரவின், கண்ணியத்தின் உயர்ந்த மெல்லியல்புகளை இந்த நூலில் திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் வெளிப்படுத்துகிறார்.
– மனுஷ்ய புத்திரன்