
அழுத்தமான வாழ்க்கையைப் பேசும் நாவல்!
நாம் நடந்து செல்கிற தெருவோ, ஒரு சாலையோ, பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களோ, காற்றில் எழுந்து வருகிற புழுதிகளோ, நம் முந்தைய வரலாற்றை, வாழ்க்கையை, வென்ற/வெல்லாத கனவுகளைப் புதைத்தே வைத்திருக்கின்றன. அதைத் தோண்ட, தோண்ட வருகிற சுவாரசியங்கள், ஆச்சரியங்களாகவோ, அதியசங்களாகவோ இருக்கலாம். கவிஞர் கலாப்ரியாவின் நான்காவது நாவலான ‘மாக்காளை’ அப்படியான, நினைவுகளைக் கிளறும் உணர்வை, தாமிரபரணியின் குளிர்ச்சியோடு...