Call Us
9840936488
9840936488
நாம் நடந்து செல்கிற தெருவோ, ஒரு சாலையோ, பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களோ, காற்றில் எழுந்து வருகிற புழுதிகளோ, நம் முந்தைய வரலாற்றை, வாழ்க்கையை, வென்ற/வெல்லாத கனவுகளைப் புதைத்தே வைத்திருக்கின்றன. அதைத் தோண்ட, தோண்ட வருகிற சுவாரசியங்கள், ஆச்சரியங்களாகவோ, அதியசங்களாகவோ இருக்கலாம். கவிஞர் கலாப்ரியாவின் நான்காவது நாவலான ‘மாக்காளை’ அப்படியான, நினைவுகளைக் கிளறும் உணர்வை, தாமிரபரணியின் குளிர்ச்சியோடு தருகிறது.
திருநெல்வேலி திரையரங்கம் ஒன்றின் பின்னணியைக் கொண்ட இந்த நாவல், 1960களில் நடக்கிறது. இன்றைக்குள்ள தலைமுறை கண்டிராத, வாழ்ந்திடாத வாழ்க்கையை அங்கதமாகவும் அழுத்தமாகவும் பேசுகிறது. அந்தக் காலகட்டத்து மக்களின் பழக்க வழக்கங்கள்,