நாம் விரும்புவதை மட்டும்தான் இந்தக் காதலில் காணவிரும்புகிறோம். பாவனைகளையும் பொய்களையும் சுயநலங்களையும் கலைத்துப்பார்க்காதவரை மகத்தான காதல் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்புறம் ஒரு நாள் பாதாளங்களைக் காண்கிறீர்கள். சட்டென ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். கோப்பையில் நிரம்பும் நஞ்சை உதட்டருகே கொண்டுசெல்லும் போதுகூட இது இவ்வளவு கசப்பாக இல்லாமல் கொஞ்சம் தேன் கலந்திருக்கலாமே என்று மட்டுமே ஆதங்கப்படுகிறீர்கள். வாழ்நாளெல்லாம் மனம் விரும்பி நஞ்சருந்துபவனின் சொற்கள் இவை.
tharajp96
Thanks to papercrest🫶