Description
பிறந்து வளர்ந்தது தேனி மாவட்டம் சின்னமனூரில். செப்பேட்டுக்குப் பெயர் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர். சி. சு .செல்லப்பாவின் ஊரும் கூட.வத்தலகுண்டு அருகில் விராலிப்பட்டி சொந்த ஊர். ஆனாலும் தந்தையின் வேலை காரணமாக குடும்பம் சின்னமனூரில் நிரந்தரமாகத் தங்கி விட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றவர் சென்னையிலும், கோயம்புத்தூரிலும் சிறிது காலம் பணியாற்றிவிட்டு சிங்கப்பூருக்கு 2008 ஆம் ஆண்டு குடிபெயர்ந்தார். பணிக்காக குடிபெயர்ந்த பெயர்ந்த சிங்கப்பூரிலேயே நிரந்தர வாசம் என்றாகிவிட்டது.
வாழ்விற்கு ஒரு முகமில்லை. அது பல்வேறு முகங்கள் கொண்டது. பல்வேறு முகமூடிகளினூடாக அவற்றை மறைத்துக் கொள்ளக் கூடியது. ஒளிந்து விளையாடும் சிறுவர்கள் ஒருவர் மற்றொருவரை கண்டு பிடிப்பதைப் போல இக்கதைகள் வாழ்வின் முகங்களை மொழியின் வாயிலாக கண்டுபிடிக்க எத்தனிக்கின்றன. மனிதனின் கதைகள் ஒருபோதும் சொல்லி முடிக்க முடியாதவை அலைகளை போல முடிவுற்று நம்மை சுற்றி நிறைந்திருக்கின்றன மனிதர்களின் கதைகள். அவ்வகையில் முடிவிலியாய் நீண்டு செல்லும் அந்தக் கதைச் சங்கிலியின் ஒரு கண்ணியாய் தங்கள் இருப்பை உறுதி செய்ய முயல்கின்றன இக்கதைகள்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.