Description
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்: உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும் எனும் இந்நூலில்
பண்டைய தமிழர்களின் வாழ்வில் வேளாண் தொழில் எப்படி ஒட்டி உயிரோட்டமாக இருந்தது என்பதை இலக்கியங்கள் வழி நமக்கு பலவகைகளில் சான்றளிக்கின்றார் இந்நூலின் ஆசிரியர் மகாராசன்.
நிலத்தையும் அதில் தோன்றிய தொழில் குலங்களையும்,வேளாண் உற்பத்தியையும் அதன் சமூக வளர்ச்சிக் கட்டங்களையும், வேளாண் குல வரைவியலையும் தொல்காப்பியம் தொடங்கி பல்வேறு இலக்கிய சான்றுகள் மூலம் எளிய, அழகிய நடையில் விவரிக்கிறார்.
வேளாளர் என்னும் வேளாண்மை தொழில் மாந்தர்களே மனித உலகின் தலைமை குடிமகன் என்ற பாவாணரின் கருத்தை மிக விரிவாக எடுத்து எழுதியுள்ளார்.
வேந்தன் வழிபாடு என்னும் பெயரில் நடைபெற்று வந்த மருத நிலத்து சடங்கை விரிவாகக் கூறி, தமிழர் மரபிற்கும் ஆரிய மரபிற்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி தமிழரின் இந்திரன் வேறு ஆரியன் இந்திரன் வேறு என்பதை மிகத் துல்லியமாக எழுதியுள்ளார்.
வேளாண் மரபினருக்கும் ஆரியருக்கமான பகை வேளாண் தொழிலப் எப்படி மையம் கொண்டது என்பதையும் நிலவுடமை சமூகம் அமைப்பின் தோற்றத்தால் பார்ப்பனர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் மிக விரிவாக எழுதியுள்ளார்.
நீர் மேலாண்மை பற்றிய தமிழர்களின் அறிவியல் கண்ணோட்டத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறார். இப்படி நாம் ஒவ்வொரு பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.