Description
அழகியல் மட்டுமே கவிதை. அரசியல் அதற்குள் பேசக்கூடாது என்கிற போலி நவீனத்துவக் குரல்கள் மேலோங்கிய நமது காலத்தில், தமிழியல் முழக்கத்தோடு பகடி கோலோச்சும் அரசியல் கவிதைகளோடு வந்திருக்கிறார் கவிஞர் ராமானுஜம் ராகவன், தனது ‘வாழ்க்கை காட்டிய வரிகள்’ நூலோடு, பகடி கோலோச்சும் இந்தச் சிறப்பானஅரசியல் கவிதைகளை விலைகொடுத்து வாங்கிப் படியுங்கள். சிரித்துக்கொண்டே படித்துவிட்டு பாரதி சொன்னதுபோல ‘ரௌத்திரம் பழகுங்கள். புதியதொரு பொன்னுலகம் விடியுமென்ற நம்பிக்கை நோக்கி நம்மையும் தன்னோடு அழைத்துப் போகும் சொற்கூட்டம் இக் கவிதைகள்.
கவிஞர் கோ.கலியமூர்த்தி
எத்தனை பொய்களை எவர் எத்தனை விசையுடன் விற்றாலும் என்றேனும் ஒரு நாள் ‘உண்மையே வெல்லும்” என்பது நமது விஞ்ஞானம் நமக்குக் கற்றுத் தந்த பாடம். ஆனால் அது எப்போது நிகழும் என்பதுதான் நமது இன்றைய கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்விக்கான விடையும் நம்மிடமே இருப்பதால்தான் நாம் இத்தகைய படைப்புகளை எழுதுகிறோம். சமூகத்திற்குத் தருகிறோம். இப்புத்தகம் என்றேனும் ஒரு நாள் வெல்லப் போகும் உண்மையின் வெற்றிக்கான சிறு விதைகளில் ஒன்றாகவே கருதத் தக்கது. கருதப்பட வேண்டும்.
பாரதி கிருஷ்ணகுமார்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.