வௌவால் தேசம்

( 0 reviews )

320 304

[single_product_discount]
[display_attribute_list attributes="Author(s)|Translator|Editor|Illustrator|Categories|Subject|Publisher"]
[single_product_shipping]

[shipping_duration]
Additional Information
[display_attributes attributes="Pages|Edition|Year Published|Binding|Language|ISBN"]
[display_single_product_tags]

Description

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மனின் ஐந்தாவது நாவல். 1800 காலகட்டங்களில் தொடங்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப்பற்றையும் விரிவாகப் பேசுகிறது. கதைகளாலும் தொன்மங்களாலும் நிரம்பி வழிந்தோடும் தாமிரவருணியை விரிவாகப் பதிவு செய்கிறது. ஆண்டுக்கு ஆறு மாசம் தண்ணீர் மீதி ஆறு மாசம் வறண்டு கிடந்த தாமிரவருணி, எப்படி வற்றாத ஜீவநதியாகப் பிரவாகித்தது என்பதை அறிகிற போது நாம் ஆச்சரியத்தால் உறைந்து போகிறோம்.

புனைவுகளாலும் படிமங்களாலும் வரலாற்றை அடுக்காமல், குவிக்காமல் கச்சிதமாக நெய்திருக்கிறார் நூலாசிரியர். வரலாற்றின் நரம்புகளை மீட்டும் போது நிறைய இடங்களில் ஆன்மிகத்தின் ஒலியே கேட்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் எதிர்மறைக் குணங்களை வௌவாலின் குணங்களுக்கு ஒப்புமைப்படுத்தி, வௌவால் தேசத்தை உருவாக்கி, அதில் நம்மையும் ஒரு அங்கமாக்கிவிடுகிறார். பல ஜமீன்தார்களை, வீரர்களை வேட்டையாடிய பிரிட்டிஷ் ராணுவத்தின் மேஜர் ஜெனரல், வௌவால் தேசத்தில் ஒரு வௌவாலாகப் பறந்து திரிகிறார். மனிதனை ஒரே இரவில் கரப்பான்பூச்சியாக உருமாற்றம் செய்த ஒரு பிரெஞ்சு எழுத்தாளனைப் போல, சோ. தர்மன் மனிதனை வௌவாலாகவும் வௌவாலை மனிதனாகவும் உருமாற்றி, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

இதன்மூலம் வௌவால் தேசத்திற்குள் நுழையும் நாம் ஒவ்வொருவரையும் பெரும் சிரிப்பில் ஆழ்த்தி, வேறொரு உயிப்பிராணியாக உருமாற்றுகிறது இந்த நாவல்.

You may also like

Recently viewed