உயிர்க்காடு
₹210 ₹200
- Author: கு. பத்மநாபன்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: கட்டுரை, விமர்சனம்
- Publisher: ஸீரோ டிகிரி பப்ளிஷிங்
Book will be shipped within 5-10 working days.
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
ஐரோப்பிய நாவல் வடிவங்களை மோகமுள் நாவலுக்குள் பொருத்திப் பார்ப்பதும், அளந்து பார்ப்பதும் ஒரு நாவலை மதிப்பிடுவதற்கான கருவிகள் அல்ல. மோகமுள் தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்கும் பெருமரம். அதன் இலைகளின் நடனமும் அடர்த்தியும் உயரமும் அகலமும் வேறானவை. கனிகளின் வடிவும், பளபளப்பும், சதைப்பற்றும், சுவையும் வேறானவை. அதன் அடிமரமும் பட்டையும் நிறமும் வைரமும் வேறானவை. பூமிக்குள் புதைந்திருக்கும் பின்னலும் நீர் தேடிச்சென்ற அதன் நாக்குகளும் வேறானவை.
– சு. வேணுகோபால்
வாழப் பிறந்தும், வாழ முடியாத சோகத்தைப் பேசுவதுதான் தி.ஜா.வின் கதை உலகம். ஆனால், அது தீவாந்தரத் தனிமையின் கசந்த உலகம் இல்லை. தாயார்கள், அண்ணிகள், தகப்பனார்கள், சகோதரர்கள், காதலர்கள், குழந்தைகள், பிற ஒத்துணர்வுள்ளவர்கள் என எல்லோரும் நிறைந்த ஓர் உயிர்ப்பின் உலகமே அது. ஆனால், அந்த இயல்புலகிற்குள்ளும், ஒவ்வொருவருக்குமேயான ஓர் அந்தரங்க உள்ளுலகமும் இருக்கத்தான் செய்கிறது. ‘பெரிய பர்வதத்தின் அடியில் நிற்கும்’ பேரனுபவத்தைப் பெற விழைவோர், மீண்டும் மீண்டும், தி.ஜானகிராமனைத் தவறாமல் வாசிப்பார்கள்.
– கல்யாணராமன்
தி. ஜா. மனித அகத்தின் ஆழங்களை அவற்றை இயக்கும் ஆதி விசைகளான காமம், குரோதம், பொறாமை, வஞ்சம் ஆகியவற்றையும், ஒளி மிக்க பகுதிகளான தேர்ந்த ரசிகத்தன்மை, அழகுணர்ச்சி, இசை, தன்முனைப்பு, தியாகம் ஆகியவற்றையும் நெய்து அளித்தவர். அவரது படைப்புகளில் இரண்டும் ஒன்றையொன்று இட்டு நிரப்பும் துலாக்கோல் தன்மையை முயல்வனவாக அமைந்திருக்கும்.
– ஜா. ராஜகோபாலன்
சாக்த வழிபாட்டில் தன் ஆன்மீக வாழ்வைத் துவங்கி, அத்வைதத்தில் கனிந்து, இறுதியில் நவீன வேதாந்தத்துக்கு வெகு அருகில் காமேஸ்வரன் வந்து சேர்வதை நளபாகம் நாவல் வழி அறியமுடிகிறது.
– கு. பத்மநாபன்
Be the first to review “உயிர்க்காடு” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.