Description
என் இடது கையில்
நாணயத்தை வைத்தேன்
அதன்மேல் ஊதினேன்
வலது கையால்
அதை மூடிவிட்டு
அவளிடம் கூறினேன்:
‘பக்பூக்’ என்று சொல்
அவளும் ‘பக்பூக்’ என்றாள்
கைகளைத் திறந்தேன்
எங்கே நாணயம்? எங்கே?
கண் சிமிட்டும் நேரத்தில்
நாணயம்
மாயமாய் மறைந்துவிட்டதே!
அவள் சிரித்தாள்
அவளது கண்களில்
அவ்வளவு ஆனந்தம்!
இறைவன் அவளைப் பாதுகாப்பானாக
அவளுக்கு
இன்னும்
இரண்டு வயதுகூட ஆகவில்லை
‘பக்பூக்’
நாணயம்
காணாமல் போய்விட்டது
வெல்வெட் ஆடை
அணிவிக்கப்பட்ட
அவளது பெரிய பொம்மையை
எடுத்துவரச் சென்றாள்
அதை என் கையில் வைத்து
‘பக்பூக்’ என்றாள்
நான் கரகரத்தக் குரலில் சொன்னேன்:
என் உயிரின் உயிரே!
இந்த பொம்மை
மாயமாய் மறைந்தால்
எவ்வளவு அழகாக இருக்கும்!
(பேத்தி ஹனூஃபிற்கு…)
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.