Description
2016, செப்டெம்பரில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை ஒட்டி இருந்த தீவிரவாதிகளின் ‘லான்ஞ் பேடு’களின் மேல் நடந்த ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’கை தலைமை தாங்கி நடத்திச் சென்ற இராணுவ மேஜர்; 11 நாள்களில் 10 தீவிரவாதிகளைக் கொன்று குவித்த போர் வீரர், போரால் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்த ஒரு பயங்கரமான துறைமுக நகரத்தில் சிக்கிப் பரிதவித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை மீட்டுக் கொண்டுவர, அதை நோக்கி தன் கப்பலை ஓட்டிச் சென்ற கடற்படை அதிகாரி, கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த நெருப்புப் பந்தான தன் ஜெட் விமானத்தை இரத்தம் சொட்டச் சொட்ட ஓட்டிக் கொண்டிருந்த ஒரு விமானப்படை விமானி.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பவையெல்லாம் அவர்களால் சொல்லப்பட்ட கதைகள் அல்லது அவர்கள் மரணத்தின் கடைசி நிமிடங்களை அருகிலேயே இருந்து பார்த்தவர்கள், அவர்களைப் பற்றிச் சொன்ன கதைகள்.
தீரமிக்க இந்தியர்கள் – தொகுதி -1 என்ற இந்தப் புத்தகம் பதினான்கு வீரர்களின் அசாதாரணமான துணிச்சலையும், அச்சமற்ற தன்மையையும் விவரிக்கிறது. நம்மால் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத சிக்கலான சூழ்நிலைகளில் அவர்கள் பணியாற்றும் விதம் பற்றி அறிந்து கொள்ள இந்தப் புத்தகம் ஒரு கை விளக்கு!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.