Description
டீன் ஏஜ் ஓர் அற்புத வரம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் துள்ளலும் துடிப்புமாக குதி போட வைக்கும் பருவம். கனவுகள், காதல்,கொண்டாட்டம் என்று வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் வண்ணமயமாகக் கண் முன்விரிக்கும் காலம். எதைப் பற்றியும் யோசிக்காதே,எதைப் பற்றியும் கவலைப்படாதே.வா, வந்து அனுபவி என்கிறது வாழ்க்கை.என்ன செய்யலாம்? கலர் கனவுகள், கலகலகப்பு, துடிதுடிப்பு.கூடவே, எதிர்காலம் குறித்த கவலை, இனம்புரியாத பயம், குழப்பம், சந்தேகங்கள்.எல்லாம் சேர்ந்த கலவைதான் டீன் ஏஜ்பருவம். கடவுளும் சாத்தானும் மாறி மாறி அலைகழிக்கும் காலகட்டம் இது. வாழ்க்கையை எப்படி, எப்போது திட்டமிடுவது? காதலிப்பது குற்றமா? இல்லை எனில், எப்போது காதலிக்கலாம்? யாரை?வாழ்வின் முக்கிய முடிவுகளை எப்போது எடுப்பது? அவை முக்கிய முடிவுகள் என்று எப்படித் தெரிந்துகொள்வது? பிரச்னைகளை,தடைகளை எப்படிக் கையாள்வது, எதிர்கொள்வது, வெற்றி பெறுவது? இப்படிச் செய், அப்படிச் செய்யாதே என்று அட்வைஸ் மழையை அள்ளி வீசும் புத்தகம் அல்ல இது. சிநேகத்துடன் டீன் ஏஜ் பையன்களின் தோளில் கை போட்டுப் பேசும் முயற்சி. நீங்கள் டீன் ஏஜில் இருந்தாலும் சரி, டீன் ஏஜ் வயதில் உங்களுக்கொரு பிள்ளை இருந்தாலும் சரி. இந்தப் புத்தகம் உங்களுக்கு ஓர் அத்தியாவசியம். முழு வாழ்க்கையும் சிறக்க அஸ்திவாரம் இடும் பருவமல்லவா அது?
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.