Description
தமிழில் புனைகதை எழுத தொடங்கியதுமே துப்பறியும் நாவல்களே மிகுதியாக எழுதப்பட்டன. ஜே.ஆர்.ரங்கராஜு, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார் போன்ற புகழ் மிக்க துப்பறியும் கதையாசிரியர்கள் முதல் தலைமுறையினர். மேதாவி போன்றவர்கள் அடுத்த தலைமுறையினர். தமிழ்வாணன் தமிழின் மூன்றாம் தலைமுறை துப்பறியும் எழுத்தாளர். தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்கள் பல்வேறு உலக நாடுகளில் நிகழ்வதாக அமையும். சங்கர்லால் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தவர், பின்னர் தமிழ்வாணன் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை ‘பிடி 22’ என்னும் நாவலில் அறிமுகப்படுத்தினார். தமிழ்வாணனின் துப்பறியும் கதைகள் எளிமையான, அதுவும் தூயதமிழில், சிறிய சொற்றொடர்களும் சிறிய பத்திகளுமாக இருப்பவை. எனவே எழுதப் படிக்கத் தெரிந்த அனைவராலும் இவரது நாவல்களை விருப்பத்துடன் வாசிக்க முடியும். குற்றங்களும் சரி, அவற்றை கண்டுபிடிக்கும் முறைகளும் சரி, எளிமையாகவும் அறிவியல் அறியாதோரும் புரிந்து கொள்ளும்படியும் அமைந்திருக்கும். அந்தவகையில் தமிழ்வாணன் எழுதிய ஐந்து மர்ம நாவல்கள், இந்த ஏழாம் பாகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.