Description
இந்நூலில் உள்ளக் கட்டுரைகள் எதுவும் மணிமுடி தரித்த மன்னர்களின் புகழ் பாடவில்லை.கங்கை கொண்டான் ,கடாரம் வென்றான், இமயம் சென்றான் என்ற தொன்மத்தின் போதையிலும் மூழ்க வில்லை .மாறாகக் கட்டுரைகள் மனிதம் பேசுகிறது. ஆரியத்தின் சனாதனத்தால்,சாதியால்,சடங்கு சாத்திரங்களால், இழிவுபடுத்தப்பட்டு நொறுங்கிப் போன மக்களின் வாழ்வியலும்,அவர்களின் உரிமை மீட்புக்காக சமூக,அரசியல்,பண்பாட்டுத் தளங்களில் புத்தர் முதல் அம்பேத்கர்,பெரியார் வரை நடத்திய கருத்தியல் போராட்டங்களும் சந்திக்கும் புள்ளிகளைக் கட்டுரைகள் தொட்டுக் காட்டுகின்றன. சமத்துவம்,சமூக நீதி பாதையில் கட்டுரைகள் சமரசமின்றி பயணிப்பதைக் காணலாம். கடந்த காலத்தின் வரலாற்று அறிவு தான் எதிர்காலத்துக்கான பாதையைத் தீர்மானிக்கிறது என்கிற புரிதலோடு கூர்தீட்டப்பட்ட இவைகள் பொழுது போவதற்காகப் படைக்கப்பட்டவைகளோ பொழுது போவதற்காக வாசிப்பதற்கோ அல்ல.நேற்றையத் தவறுகள் இன்றும் தொடராமல் இருக்க சமூக,அரசியல்,பண்பாட்டுத் தளங்களில் இந்தக் கட்டுரைகள் கருத்தியல் ஆயுதமாக சுழல வேண்டும் என்ற நோக்கில் வரையப்பட்டுள்ளன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.