Description
ஶ்ரீ வைணவ நெறிக்காகத் தன்னை அர்ப்பணித்த ஆச்சாரியர்களுள் முக்கியமானவர் ஸ்ரீ இராமானுஜர். சாதாரண மனிதராகப் பிறந்து பெரும் மகானாக உயர்ந்த இவரது வாழ்க்கை பல போராட்டங்களும் தியாகங்களும் நிறைந்தது. அந்த நிகழ்வுகளையும் அவரது வாழ்க்கைப் பயணத்தில் நிகழ்ந்த பல அரிய சம்பவங்களையும் காட்சிப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
ஸ்ரீ இராமானுஜர் பாரம்பரிய சமயத் தலைவர் மட்டுமல்ல, ஶ்ரீ வைஷ்ணவத்தில் பெரும் புரட்சியை உருவாக்கியவர். தாழ்த்தப்பட்டோரை திருக்குலத்தாராக்கி ஆலயப்பிரவேசம் செய்வித்து பல மாற்றங்கள் ஏற்பட வழி செய்தவர். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஜெ.பார்த்தசாரதி மிகவும் எளிமையான நடையில், மனதை உருக்கும் வகையில், பக்திப் பரவசத்தோடு ஶ்ரீ இராமானுஜரின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதி இருக்கிறார். வைஷ்ணப் பரிபாஷையை அதிகம் பயன்படுத்தாமலும், அதிலிருந்து முற்றிலும் விலகி அந்நியப்படாமலும் இயல்பான மொழியில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது அதன் சிறப்பு.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.