சிரி… சிரி… தூத்துக்குடி பின் அட்டை அந்தக் காலத்தில் நாடக மேடைகளில் தோன்றிய கோமாளிகளிலிருந்து ஆரம்பித்து இப்போது சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவேற்றித் திரைத்துறைக்கு வந்திருப்பவர்கள் வரையிலான இருபதுக்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கை விபரங்களையும் அவர்களுடைய சாதனைகளையும் சுவைபடக்கூறும் நூல் இது. இதில் இடம் பிடித்திருக்கும் நகைச்சுவைக் கலைஞர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தொழில், கல்வி, இராணுவம், காவல் மற்றும் வணிகத்துறையில் முன்னணியில் இருப்பவர்கள் என்கிற பெருமிதங்களுடன் கூடுதலாகச் சேர்வது இந்த நகைச்சுவை நடிகர்களின் வரிசையும் தான். எல்லோரையும் மகிழ வைத்த, வைக்கும் தமிழ் நகைச்சுவைக் கலைஞர்களுக்கான Tribute ஆகப் பெருமிதத்துடன் கொண்டாட்ட மனநிலையில் எழுதப்பட்டிருக்கிறது இந்நூல். இனி வரும் காலத்தில் வெள்ளித்திரை, சின்னத்திரை, வலைத்தளம் என்று எல்லாத் துறைகளிலும் நுழைந்து மகிழ்விக்கக் காத்திருக்கும் , மகிழ்ந்து வாழக் காத்திருக்கும் அனைவருக்குமான நூல் இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.