Description
‘செங்கிஸ்கான்’ தொல்குடி சமூகங்களின் தலைமகன்.
தொல்குடி சமூக பண்பாடுகள்… மனித நாகரிகத்தின் குழந்தைப் பருவம்… குழந்தைப் பருவம் ஒவ்வொருவருக்கும் மறக்க இயலாத இனிய நினைவு…
நகர நாகரிக தாக்குதல், பேரரசு ஒடுக்குமுறை, சாம்ராஜ்ய ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை எதிர்த்துப் போரிட்ட மாவீரன் செங்கிஸ்கான்… தமது பண்பாட்டை, வாழ்வியலை, பேணிக்காக்க மங்கோலிய பழங்குடி இனக்குழுக்களை ஒன்று திரட்டி, சம்மேளனத்தை கட்டமைத்து போரிட்ட வெற்றியாளர் செங்கிஸ்கான்… அவரை உலகின் முதல் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்றழைப்பது மிகையாகாது.
நவீன வரலாற்றாளர்கள் செங்கிஸ்கானை ஒரு அரக்கன், ரத்தக்காட்டேரி, படுகொலைக்காரன், யுத்தவெறியன், இராணுவ சர்வாதிகாரி என்றே சித்தரித்தனர்.
தன் இருப்பை அழிக்க தனது சமூகங்களை அழித்தொழிக்க நாலாப்பக்கத்திலிருந்து நெருக்கித் தள்ளிய அழுத்தத்தின் உராய்விலிருந்து செங்கிஸ்கான் உதித்தார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.