சங்கரன்கோவில் – ஆயிரம் ஆண்டுகள் மேலான வரலாற்றைக் கொண்ட பழமையான ஒரு நகரம். தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவில் நகரத்தில் பிரம்மாண்டமாக வீற்றிருருக்கும் மாபெரும் சிவாலயம், அதன் தனிச்சிறப்புகள், ஆலயத்திலும், நகரிலும் ஒருங்கே திகழும் சமத்துவம், சுற்றுப்புற ஊர்களின் வரலாற்றுச் சிறப்புகள், அன்றாட வாழ்வியல் இப்படிப் பல விஷயங்களைச் சுவைபட எழுதியிருக்கிறார் டாக்டர் அகிலாண்டபாரதி. ஊரின் அடையாளங்களாக விளங்கும் நெசவுத்தொழில், பால்பண்ணைகள், கமிஷன் கடைகள், அனைத்தையும் பதிவு செய்ததுடன் கூடவே தொழிலாளர்களின் வறுமை நிலையையும், அதைக் களைய நிகழும் போராட்டங்களையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். சங்க காலம் முதல் தற்காலம் வரை சங்கரன்கோவிலின் இலக்கியவாதிகள், மக்கள் கலைஞர்கள் அனைவரையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார். பூலித்தேவர் முதல் காய்ச்சல் வந்தால் கொத்து பரோட்டா சாப்பிடும் சங்கத்தினர் வரை பலரைப் பற்றி இந்தத் தொகுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நேர்மையும், நெகிழ்வும் நகைச்சுவையும் கலந்து எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் சந்தியா பதிப்பகத்தின் நகரங்களின் கதை வரிசையில் முக்கியமான ஒரு நூலாக அமைகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.