சாதியின் பெயரால்
ஆணவக் கொலைகளின் பதிவு
₹260 ₹247
Additional Information
Description
நம் காலத்தின் சமூகக் கொடுமைகளுள் ஒன்றான ஆணவக்கொலையை உள்ளார்ந்து புரிந்துகொள்ள உதவும் முதன்மையான ஆவணம் இது. இளவரசன், கோகுல்ராஜ், கண்ணகி-முருகேசன், உடுமலை சங்கர், நந்தீஷ் என்று தொடங்கி சாதியின் பெயரால், உற்றார் உறவினர்களாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட இளம் தலைமுறையினரின் வாழ்வும் மரணமும் இதில் பதிவாகியுள்ளன. சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் ஒரு மாநிலத்தில் சாதிவெறி எவ்வாறு வேர்கொண்டது; எவ்வாறு சமூக அமைப்புகள் எங்கும் நீக்கமறப் பரவியது; நீதியை, சமத்துவத்தை, அடிப்படை மனிதத்தன்மையை எவ்வாறு அழித்தொழித்தது என்பதை இந்நூல் தரவுகளோடு காட்சிப்படுத்துகிறது. சாதியோடு நிறுத்திக்கொள்ளாமல் கொலையுண்டவர்களின் குடும்பப் பின்னணி, அவர்களுடைய வாழ்விடம், அந்த இடத்தின் அரசியல், சமூகப் பொருளாதார வரலாறு ஆகியவற்றையும் கவனப்படுத்தி ஆணவக்கொலை குறித்த நம் புரிதலை விரிவாக்குகிறது. பரபரப்புகளைத் தவிர்த்துவிட்டு, காவல் துறை ஆவணங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள், ஆய்வறிக்கைகள், கள அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நூலைக் கட்டமைத்திருக்கிறார் இளங்கோவன் ராஜசேகரன். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தி இந்து’, ‘ஃபிரண்ட்லைன்’ உள்ளிட்ட இதழ்களில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். தலித்துகளும் சிறுபான்மையினரும் எதிர்கொண்டுவரும் ஒடுக்குமுறைகளை ஆவணப் படுத்தி வருபவர்.
Additional information
Author | |
---|---|
Category | |
Sub Category | |
Edition | 1st (First) |
Year Published | |
Binding | Paperback |
Language | |
Publisher | |
Special Category |
Be the first to review “சாதியின் பெயரால்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.