Description
குலக்கல்வித் திட்டம்’ என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது. கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப் பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும் செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம். இத்திட்டம் எவ்வாறு உருவானது, எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது, இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒலித்த குரல்கள் எவை, பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் எவ்வாறு இத்திட்டம் கைவிடப்பட்டது என்பதை எல்லாம் ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில், விறுவிறுப்பான நடையில் இந்நூல் ஆராய்கிறது. குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான கிளர்ச்சியின் பின்புலத்தை விளக்கிப் பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி விரிவான முன்னுரை எழுதியிருக்கிறார். நவீன தமிழகத்தின் சமூக-அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்ள விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.