Description
ஒரு நடிகை போல அந்த பளபளப்பு வெளியில்
அவள் பவனி வருகிறாள்
அவன் தத்ரூபமாக தன் ஃபோனில் ஒரு ஷார்ட் வீடியோவை எடுக்கப் பணிக்கப்பட்டிருக்கிறான்
ஒரு சில ஒன்மோர்களுக்குப் பின் அவளுக்குத் தெரிந்தது:
அவன் டேக் ஓகே செய்ய மாட்டனென்று.
அவனுக்குப் புரிந்தது
இது ஒரு பரவசத்தின் Time Loop என்று.
கவனித்துக்கொண்டிருந்த நான் வயிறு எரிய இதை டாலரேட் செய்வது எப்படி என புகைத்துக் கொண்டிருந்தேன்
ஒரு மாயாவை சாயாவாகக் கருதும் மார்க்கத்திற்கு அந்தர் பல்டியடிக்கலாமா என்றிருந்தேன்
அதற்குள் ஹெவியாகப் பசிக்க
பட்டினியின் போதெல்லாம் தொந்தியைச் சற்று ஸ்லிம்மாக பாலித்துக்கொண்டு நடக்கும் அந்த ராஜ Single-ன் நடையை நினைவு கூர்ந்தேன்
நினைவு கூர்ந்தபடியே அங்கிருந்து நடையைக் கட்டினேன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.