Description
கடந்த பத்து ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்ற, ரோன்டா பைர்னின் ‘இரகசியம்’ புத்தகம், உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை நம்புதற்கரிய விதத்தில் மாற்றியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகையோரின் உண்மைக் கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து, ரோன்டா பைர்ன் இந்நூலை உருவாக்கியுள்ளார். ‘இரகசியம்’ புத்தகத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய பொருளாதாரம், உறவுகள், தொழில்வாழ்க்கை, ஆரோக்கியம் ஆகியவற்றைக் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மேம்படுத்தியுள்ள சாதாரணமான மக்களுடைய அசாதாரணமான அனுபவங்களின் தொகுப்புதான் ‘இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது’ என்ற இந்நூல். ‘இரகசியம்’ புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த பிரபஞ்ச விதியான ஈர்ப்பு விதியைப் பயன்படுத்தி உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை உங்களாலும் மாற்றிக் கொள்ள முடியும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.