காதலித்தார்கள். வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார்கள்.
சொந்தமாக பிசினஸ் செய்து சமூகத்தில் தங்களை நிலைநிறுத்திக் காட்டவேண்டும் என்ற முனைப்புடன் நகரத்துக்குக் குடிபெயர்ந்தார்கள்.
தொழில் தொடங்க பணம் தேவைப்பட்டபோது, தன் கல்லூரித் தோழனை அவள் சந்தித்தாள். சிரித்த முகமும், ஆதரவான வார்த்தைகளுமாக அவர்களுக்கு உதவ நண்பன் முன்வந்தான்.
அதுவரை சுகமாயிருந்த அவர்களுடைய கதை அந்த நிமிடத்திலிருந்து மொத்தமாக தடம் புரண்டது..
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய முதல் படமான ‘கனா கண்டேன்’ திரைப்படத்தின் கருவும், முக்கிய பாத்திரங்களும் (திரைக்கென பல மாற்றங்களைக் கண்டாலும்) சுபாவின் விறுவிறுப்பான இக்கதையிலிருந்துதான் உருப்பெற்றன என்பது கூடுதல் தகவல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.