குழந்தைகளுக்கான பொருளாதாரம்
Rated 0 out of 5
( 0 reviews )₹180 ₹171
You save ₹9.00 (5%) with this book
- Author: ரங்கநாயகம்மா
- Translator: கொற்றவை
- Category: வணிகம் & பொருளாதாரம்
- Sub Category: கட்டுரை, பொருளாதாரம், மார்க்சியம்
- Publisher: Sweet Home Publications
+ ₹40 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Pages: 484
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
நூலின் பெயர்தான் குழந்தைகளுக்கான பொருளாதாரமே ஒழிய, இந்த நூல் பெரியவர்களுக்கானது. ஆரம்ப அத்தியாயங்கள்தான் அ..ஆ..இ… என உள்ளது. போகப்போக மூலதனத்தின் சாரம் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய, பெரிய எழுத்துக்களில், வினா- விடை பாணியில் மிக அற்புதமாக இந்த நூலை வடித்திருக்கிறார்கள். ‘பண்டமாற்று’ எப்படி தொடங்கியது. அதற்கு மாற்றாக பணம் எப்படி உருவானது. ஒரு பொருளுக்கு எப்படி விலை வைக்கப்படுகிறது. அதன் மூலம் எப்படி உபரி உற்பத்தி கிடைக்கிறது. உபரி உற்பத்தி எப்படி செல்வங்களை குவிக்கிறது. அபரிதமான செல்வம் எப்படி அனைத்து மக்களின் பசி,வீடு, வேலையின்மை, மருத்துவம் போன்றவைகளுக்கு பயன்படாமல் இருக்கிறது. வாடகை, வட்டி, கருவிகளுக்கு கட்டணம், சம்பளம், வசதிகள் என்ற பெயர்களில் எப்படி இலாபமானது சட்டப்பூர்வமாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதை வெகு நேர்த்தியாக இந்த நூல் விளக்குகிறது.
இந்த நூலின் மொழிபெயர்ப்பு கன்னடம், மலையாளம், இந்தி, பஞ்சாபி, மராத்தி, தெலுங்கு என பல மொழிகளில் வந்துள்ளது. வட்டி, வாடகை, சுரண்டல் போன்றவைகளை கேள்வி கேட்காத எந்த சீர்திருத்தவாதிகளும் இந்த சுரண்டல் அமைப்பை பாதுகாக்கின்றனர். சுற்றுச்சூழல், இலஞ்ச ஒழிப்பு, மனிதநேயம் என தனித்தனியான சித்தாந்தங்கள் மக்களை திசைதிருப்பவே பயன்படும் எனத் தெளிவாக பேசுகிறார். தலைவர்களைப் பற்றிய குறிப்பு இல்லை. தத்துவ விளக்கம் மட்டுமே இந்த 463 பக்க நூலில் பேசப்படுகிறது.
தெலுங்கில் வந்த இந்த நூலை, ஆங்கிலம் வழியாக கொற்றவை இதனை மொழிபெயர்த்துள்ளார்.
Be the first to review “குழந்தைகளுக்கான பொருளாதாரம்” Cancel reply
You must be logged in to post a review.
You may also like
-
-
-
-
-
அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம்
₹180₹171(5% OFF)Rated 0 out of 5( 0 reviews ) -
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.