பூப்பு
மாதவிடாய் - சந்தேகங்களும் விளக்கங்களும்
Rated 0 out of 5
( 0 reviews )₹50 ₹48
You save ₹2.00 (4%) with this book
- Author: ரேணுகாதேவி
- Category: சமூகம் மற்றும் கலாச்சாரம்
- Sub Category: பெண்ணியம்
- Publisher: வாலறிவன் பதிப்பகம்
+ ₹35 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Pages: 48
- Edition: 1st (First)
- Year Published: 2021
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
நூலின் இந்த அழகான தலைப்பு¸ நூலின் உள்ளடக்கமான ‘பெண்களின் ‘மாதவிடாய்’ காலத்துப் பிரச்சினைகளை அலசுவதில் இயல்பாகப் பொருந்திப் போகிறது. பாலுட்டிகளின் இனப்பெருக்க உறுப்புகளின் இயங்கியல்¸ மனித இனத்தில் மட்டும் உளவியல்¸ பண்பாடு மற்றும் பாமர நம்பிக்கைகளின் சிக்கலாக உருக் கொண்டிருக்கிறது. பெண்ணின் இயற்கையான இனப்பெருக்கத்திற்கு தயாராகிற நிகழ்வை¸ அவளால் இயல்பாக ஏற்றுக் கொள்ளப் பட்டு கடந்து செல்கிற பக்குவத்தையும் விழிப்புணர்வையும் அவளுக்கு சமூகமும் கல்விக் கூடங்களும் கற்றுத் தராத போதாமையை இந்த நூல் காத்திரமாக முன்வைக்கிறது. ‘வீட்டுக்கு விலக்கு’¸ ‘தீட்டு’¸ ‘தூரம்’ என்றெல்லாம் தீண்டாமையைச் சுட்டி பெண்களை தள்ளி வைக்கிற அடையாளமாக ‘மாதவிடாய் நாட்கள்’ அமைந்து விடுகிற நம்பிக்கைக் கூறுகளைப் புறம் தள்ளி மாதவிடாய் நிகழ்வு பற்றி பதின் பருவத்தின் ஆரம்பத்தில் மாணவிகளிடையே இது பற்றி விழிப்புணர்வும் போதிய அறிவும் கடத்தப் பட வேண்டும் என்கிற சமூக அக்கறையின்பால் இந்த நூல் வெளிச்சம் பாய்ச்சுகிறது. மாதவிடாய் நாட்களில் பெண்களின் எல்லாப் பிரச்சினைகளையும் பெண்ணிய அக்கறையுடனும் சுகாதாரப் பின்னணியுடனும் அறிவியல் பூர்வமாகவும் மருத்துவக் கோணத்திலும் ‘பூப்பு’ ரேணுகாதேவியின் எளிமையான ஆனால் காத்திரமான மொழி நடையில் அலசுகிறது. மே மாதம் ஐந்தாம் நாள் சர்வதேச அளவில் மாதவிடாய் காலத்தில் பெண்களின் சுகாதாரத்தை முன்வைத்து (‘MENSTRUAL HYGIENE DAY’) அனுசரிக்கப் படுகிறது போன்ற நாம் அறியாத பல செய்திகள் இச்சிறு நூலில் காணக்கிடைக்கிறது. பெண்ணுடல் இனப்பெருக்கத்திற்கு தயாராகும் நாளில் தொடங்கி கர்ப்ப காலம் உள்ளிட்டு மாதவிடாய் சுழற்சி முற்றிலுமாக நீங்கிப் போகிற பருவம் வரை பெண் கடந்து போகும் வலிகளை அதன் காரணங்களை அவற்றைக் கடக்கின்ற சுகாதார உடற்கூற்றுக் கல்வியை இந்த நூல் மூலமாக பதின் பருவத்து பெண் குழந்தைகளுக்கு சொல்ல முடியும் என்பதில் பெண்களுக்கு இச்சிறு நூல் ஒரு கையேடு போல அமைந்து விடுகிறது.
Be the first to review “பூப்பு” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.