Description
சொற்களில் தங்கியிராத கோணங்கியின் அதிகதை நாவல்
பிதிராவின் நத்தைவடிவம் சுருள்வடிவங்களால் உருவாகியிருந்தன. மோனமாய் திறக்கும் சிருஷ்டிகணம். மலரும் பழக்கத்தை உடலாகக் கொண்ட குற்றவாளிகள் பூவின் கவலை கொள்ளக்கூடும். குளிரால் மரங்களுடன் மௌனமாய் இருக்கிறார்கள் பிதிராவாசிகள். இந்த இரவின் குளிரில் வீடற்றவர்களின் வெளியில் மெல்ல நிலவு தூங்கிக் கொள்கிறது. புனைவுகள் நடமாடும் சோக இழை. கோகின் கலைந்த வெள்ளையுடல் காலனியக் கோரத்துடன் கடலில் கிடந்தது.
நிலவு மயங்கினால் உயிர்பெறக்கூடிய பிதிராவின் சாமகால தறிகள் ஊர் உருவத்தை வேறொன்றாக நெய்து காட்டும். ஓசையில் நகர்ந்து கொண்டே இருக்கும் சுண்ணாம்பு ஊரின் நீர்ச்சுனை அடியில் உவர்மகள் இலந்த்ரா விரல் வைத்துத் துயில்கிறாள் மண்குடத்துடன். பாறையின் நிழலில் குளிர்ந்த எறும்பு மண் புற்றில் மேலே, கீழே ஓடும் பிதிராவின் கால்களின் ஒளிர்வு. பிதிரா ஒரு கதாபீடிகை.
ஆலமரத்தடியில் பிதிரா வாசித்தால் ஒவ்வொரு பிரதியில் ஒளிந்திருக்கும் குணங்களைப் பொறுத்து நிழல்கள் மாறுபடும். அவரவர் சிற்பிக்க உளிகளால் குடைந்து செதுக்கி செதுக்கி இருட்டும் வெளிச்சமும் பாய்ச்சி இப்பிரதியில் புதைந்து கிடக்கும் பிதிராவை திறப்பதற்குமுன் கல்வாசல் வழி நுழைவதற்குள், வேறு சிலர் வேறுபடும் உருவத்தில் திறந்துவிடப் போகிறார்கள். வாசனை தரும் ஒளி வீசியது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.