Description
‘நீ முன் வைக்கிற விடுதலை என்ன?’
‘பொதுவாக பழைய மதங்களில் ஆஃப்டர் லைஃப் பத்தி ரெண்டு ஸ்கீம் கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்னு மறுபிறவி இல்லாத நிலை. இன்னொன்னு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ போற நிலை. அதாவது விடுதலைங்கிறது தரையில் இருந்து பல மைல் உயரத்தில் இருக்கு. இதற்கு எதிராகத்தான் கம்யூனிஸம் காந்தியம் மாதிரியான முற்போக்கு மதங்கள் பேசின. அதாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்தி ஒவ்வொரு தனிமனிதனின் விடுதலைக்கான பாதையை சுத்தம் பண்ணிக் கொடுக்கிற வேலையை இந்த மதங்கள் செய்தன. எனக்கு ரெண்டிலுமே உடன்பாடில்லை. இந்த மதங்களின் பொதுப்பண்பா விடுதலை ‘அங்கு’ இருப்பதாக நம்பப்படுவதைச் சொல்லலாம். ஆனால் நான் விடுதலை ‘இங்கு’ இருக்குன்னு சொல்றேன். நமக்கு பேஸிவான மனநிலையோட ரொம்ப தூரம் நடக்கிறது பிடிச்சிருக்கு. அப்படி நடந்து நடந்து தான் நாம் நாகரிகங்களை உருவாக்கினோம். அதனால்தான் இன்னிக்குவரை வாக்கிங் போயிட்டு இருக்கோம். இந்த விடுதலை கருத்தியல்களில் இருப்பதும் இந்த பேஸிவ்னெஸ்தான். அந்த பேஸிவ்னெஸ்தான் நம்முடைய அன்றாட இருப்பில் இருக்கிற அநீதியை நம் கண்ணிலிருந்து மறைக்குது. என்னுடைய தீர்வு நம்முடைய இருப்பு எப்படி நம்முடைய அறிவுக்கு எதிரா இருக்கு என்பதை உணர்த்துவதுதான். அதாவது மொழி வழியாகத்தான் நாம் சிந்திக்க கத்துகிட்டோம். நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கியிருக்கோம். ஆனால் அந்த அர்த்தத்துடைய அடுத்த படியில் கால் வைக்கத் தயங்குகிறோம். நீதிங்கிறது என்ன? சிந்தனையின் உச்சமா எது வெளிப்படுதோ அதுதான் நீதி. ஆனா அந்த புது நீதியை நேற்றைய நீதிகள் தடுக்கும். தயங்கவைக்கப் பார்க்கும். நம் இருப்பில் இருக்கிற இயல்பான அநீதியைச் சொல்றதுதான் இன்றைய நீதி. நாம் தினம் தினம் உயிரோடு இருப்பதால் நமக்கு ஏற்படும் துன்பங்களும் நம் துன்பத்தை சரிகட்டுவதற்காக நாம் பிறருக்கு இழைக்கும் துன்பங்களும் என்ற ஒரு விஷச்சுழலாகத்தான் வாழ்க்கை இருக்கிறது. இதிலிருந்து மனமுவந்து வெளியேற ஒரு வழியைக் கண்டுபிடிப்பதுதான் நான் முன்வைக்கும் தீர்வு.’
– நூலிலிருந்து
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.