பங்குச் சந்தை சில குறிப்புகள்

( 0 reviews )

200 190

[single_product_discount]
[display_attribute_list attributes="Author(s)|Translator|Editor|Illustrator|Categories|Subject|Publisher"]
[single_product_shipping]

[shipping_duration]
Additional Information
[display_attributes attributes="Pages|Edition|Year Published|Binding|Language|ISBN"]
[display_single_product_tags]

Description

பங்குச்சந்தை என்பது, பணத்தைப் போட்டு பணத்தை எடுக்கும் இடம்.  ஆனால், எல்லோரும் போடுகிற பணத்தை எடுப்பதில்லை.  சிலர் தொடர்ந்து அங்கே  பணத்தை தொலைக்கிறார்கள்.

ஆனால்,  வேறு சிலர் அதன் நுட்பத்தை சரியாக புரிந்து கொண்டு, நிதானமாக, சரியான முடிவுகள் எடுத்து, தொடர்ந்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயிரங்கள், லட்சங்கள், கோடிகளில் பலரும் வியாபாரம் செய்கிற பங்குச்சந்தை குறித்து தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.  எவ்வளவு தெரிந்து கொண்ட பின்னரும் செய்யக்கூடிய தவறுகளும் இருக்கின்றன.

புகழ்பெற்ர ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து பொருளாதாரம், பணம், வியாபாரங்கள் குறித்து வெளிவரும் நாணயம் விகடன் டிஜிட்டலில்,  சோமவள்ளியப்பன் 36 வாரங்கள் எழுதிய, ’பொருளாதாரம்- பணம்- பங்குகள்’ என்ற தொடரின் தொகுப்பு.  புதிதாக படிப்பவர்களுக்கு ஏற்ற விதம் வரிசை மாற்றி அமைக்கப்பட்ட புத்தகம்.

ஒரு குறிப்பிட்ட ஒன்றரை ஆண்டுகளில் நிகழ்ந்தவை  குறித்து  எழுதப்பட்டதாக இருந்தாலும், பங்குச்சந்தையில் புழங்குகிறவர்களுக்கு  படிப்பதற்கு பலன் உள்ளதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் பல விடயங்கள் கொண்ட நூல்.   பங்குச்சந்தை குறித்து 10 க்கும் அதிகமான புத்தகங்கள் எழுதியிருக்கும் சோம வள்ளியப்பனின் எழுத்து நடை, கடினமான விடயங்களை இலகுவாக புரிய வைக்கிறது.

பங்குச் சந்தை சில குறிப்புகள் பல  பலன் தரும்  விவரங்கள்.  கூடுதல் வாசிப்புக்கானது.

You may also like