பனை எழுக
₹750 ₹713
Additional Information
Description
தமிழில் ஏதேனும் ஒருவகை எழுத்து முற்றிலும் அரிதாக உள்ளது என்றால் காட்சன் எழுதியிருப்பது போன்ற இவ்வகை பயணக் கட்டுரைகள்தான். ஒருவகையில் இது ஓர் ஆன்மிகப் பயணம். அவர் இந்தியப் பெருநிலத்தின் வழியாக பெரும் வேட்கையுடன் சென்று கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கணமும் தன்னையும் நிலத்தையும் அனைத்தையும் கடந்த ஒன்றையும் கண்டுகொண்டிருக்கிறார். இந்தியாவின் நாமறியாத ஒரு தளம் பற்றிய மிக விரிவான சித்தரிப்பு இந்தப் பயணக்கட்டுரைகளில் உள்ளது. மிகச்சிறந்த இலக்கியவாசகரான காட்சனின் மொழி தமிழின் முக்கியமான புனைவெழுத்தாளர்களுக்கு நிகராக எழுகிறது. தி.ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’ சிட்டிசிவபாத சுந்தரத்தின் ‘கௌதமபுத்தரின் அடிச்சுவட்டில்’ போன்ற நூல்களுக்கு நிகரானது இந்நூல்.”
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் முன்னுரைக் குறிப்பின் வழியாக நம்மால் இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தை உணரமுடிகிறது. இந்தியச்சூழலில் காட்சன் சாமுவேல் அவர்களின் பனைசார் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது. ஓர் அருட்தந்தையாகத் தனது வாழ்வை செலுத்திக்கொண்டு, ஒவ்வொரு சிறுவாய்ப்பிலும் பனைமரத்தை இறைக்குறியீடாக எல்லா மக்களிடத்தும் பதிவுசெய்கிறார். பனைத்தூதுவன் போல இத்தேசமெங்கும் அச்செய்தியை சுமந்தலைகிறார். 28 வருடங்களுக்கு முன்பு அவர் தொடங்கிய இப்பயணம்தான், சமகாலத்தில் இங்கு நிகழும் அனைத்து பனைசார்ந்த முன்னெடுப்புகளுக்குமான செயற்தொடக்கம். விதைத்து நெடுங்காலந்தள்ளி பயன்தரும் பனைமரம் போல அவரின் வாழ்வும் பயணமும் எதிர்காலத் தலைமுறைகளுக்கான நிகழ்கால முற்றளித்தல்.
அருட்தந்தை காட்சன் சாமுவேல் அவர்கள் தனது நெடிய பயணங்களின் வழியாக ஆவணப்படுத்திய பனைசார் வாழ்வியலின் கட்டுரைத்தொகுப்பே ‘பனை எழுக’ எனும் இந்நூல். ஏற்கனவே வெளியான பனைமரச் சாலை நூலின் கட்டுரைகள் இதில் உள்ளடங்கும்.
Additional information
Author | |
---|---|
Category | |
Sub Category | |
Edition | 1st (First) |
Year Published | |
Binding | Paperback |
Language | |
Publisher |
Be the first to review “பனை எழுக” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.