Description
ரசனை பகுதியில் வரும் கட்டுரைகள் பல்வேறு தளங்களை அலசிச் செல்பவை. அது கனடாவில் நிகழும் ஈழத்தின் ‘காத்தவராயன் கூத்து’ எனும் நிகழ்த்து கலையாகட்டும், ரஷ்ய இலக்கிய மேதமைகள் தல்ஸ்தாய் செக்காவ் இருவருக்குமான சந்திப்பில் தல்ஸ்தாய் செக்காவின் ஏனைய படைப்புகளைப் புகழ்ந்துவிட்டு அவரின் நாடகங்களைப் பற்றிச் சொல்கையில் “நீ ஷேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்” என்ற விமர்சனத்தைக் கேட்டவுடன் செக்காவின் மகிழ்ச்சியை விவரிக்கும் பகுதிகள் அழகு மிகுந்தவை. இந்தப் பகுதியின் கட்டுரைகளில் நேர்காணல் பகுதியின் தீவிரத் தன்மை மாறி முத்துலிங்கம் அவர்களின் வழக்கமான பகடி கலந்த எழுத்து நடை இரசவாதம் செய்கிறது.
அ. முத்துலிங்கம் விரைவில் அனைத்து மானுட மனத்திலும் இடம் பெறுவார். ஏனெனில் அவர் வெறுமனே எழுதவில்லை… அனைத்து உயிர்களின் மீதான நேசிப்பில் நம்முடன் பேசுகிறார்.
– இரா. துரைப்பாண்டி
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.