Description
இந்திய மரபின் தேர்ந்த கதைசொல்லி அமிதபா பக்சி. நவீனத்தின் சிக்கல்களைக் கையாள்வதில் பரந்த பார்வையும் கொண்டவர். புறத்தை விவரிப்பது போலக் காட்டி அகத்திற்குள் ஆழ்ந்து செல்வது இவரது எழுத்தின் இயல்பு. கதை கேட்கும் ஆனந்தத்தையும் வாழ்வுத் துயரம் தரும் பதற்றம் உள்ளிட்ட கொந்தளிப்பையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்தும் நுட்பம் ‘பாதி இரவு கடந்துவிட்டது’ நாவலில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பாத்திரத்தின் பின்னோடும் போதும் படிப்படியாகப் பெருந்திறப்பு ஒன்றைக் கண்டடைய முடிகிறது. இத்தகைய நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது முக்கியமான நிகழ்வு. நழுவி இழுத்துச் செல்லும் மொழி வாசிக்கச் சுகமாக இருக்கிறது. சுழலில் தவிக்கும் தமிழ் எழுத்துப் பரப்பில் இது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.