Description
மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி வடக்கு ஆப்பிரிக்கா வரையிலான வெவ்வேறு தேசங்களைச் சேர்ந்த சமகால பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பழமையான பண்பாட்டு விதிமுறைகள், புதிய தேவைகள், திருமணம், தாய்மை, காதல், கல்வி, பணி மற்றும் சுதந்திரம் என்று நவீன காலப் பெண்கள் அராபியச் சூழலில் எதிர்கொள்ளும் அனைத்து விதமான சிக்கல்களையும் இவை நுணுக்கமாகப் பேசுகின்றன. எதிர் பாலினங்களுக்கிடையேயான உறவுமுறைகளை ஆராய்வதோடு வழமையான பண்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தவும் செய்கின்றன. இந்தக் கதைகளினூடாக உருவகப்படும் நவீன அராபியப் பெண்ணின் சித்திரத்தின் வழியே அவர்களுடைய வாழ்க்கைமுறையையும் எண்ணப்போக்குகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.