Description
கேரளத்தின் புகழ்பெற்ற ஓணம் பண்டிகையை மையப்பொருளாக எடுத்துக் கொண்டு விவாதிக்கிறது இந்நூல். கேரளா ஓணம் பண்டிகையில் தொடங்கி தமிழகத்தின் வெவ்வேறு காலத்தில் நிலவிய, வெவ்வேறு இடங்களின்/ மரபுகளின் வழியாக ஊடறுத்துச் சென்று ஒரு முடிவை எட்டியுள்ளது. இதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர் பார்வையை ஆய்வு அணுகுமுறையாக இந்நூல் வரித்துக்கொண்டுள்ளது.
இந்நூலின் மாயாஜாலத் தன்மைக்கு இந்த அணுகுமுறையே காரணம். அயோத்திதாசரின் எழுத்துகளை அறிமுகப்படுத்தி விவாதிப்பது ஒருவகை என்றால், அவர் கருத்துகளை ஒரு பார்வைச் சட்டமாக்கிக் குறிப்பான விஷயத்தை ஆராய்ந்து எழுதுவது மற்றொரு வகை. இந்நூல் இரண்டாம் வகையைச் சார்ந்தது. இன்னும் சொல்லப்போனால் பண்டிதரின் முறையியலைக் கருவியாகக் கொண்டு உள்ளூர் பண்பாட்டு நிகழ்வு பற்றி எழுதப்பட்ட முதல் நூல் என்றுகூட இதனைக் கூறலாம்.
பண்பாட்டுக் கூறுகளைக் குறியீடுகளாகக் கொண்டு வாசிப்பது இம்முறையியலின் அம்சம். அதைக் குறிப்பதற்காகவே உள்மெய் என்ற சொல்லாடல் இந்நூல் முழுவதும் கையாளப்பட்டுள்ளது. பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு இன்றைய இந்து மதம் கூறும் காரணங்களையும் பெயர்களையும் நிகழ்வுகளையும் உள்மெய்யாக வாசிப்பது இதன் பொருளாகும். இன்றைக்கு இதைப் போன்ற நிகழ்வுகளுக்கான காரணங்கள் யாவும் கதைகளாகப் கதைகளாகக் கட்டப்பட்டு வழங்கப்படுகின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.