நோயாளிகளும் மருத்துவர்களும்: தமிழரின் சித்த மருத்துவ முறையை ஐரோப்பியர் கண்டதும் தெரிந்துக்கொண்டதும் (1550 - 1873)

( 0 reviews )

290 276

You save ₹14.00 (5%) with this book
+ 30 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)

↪ Orders can take 1-4 business days to process before shipping. As soon as your package has left our warehouse, you will receive a confirmation by email.
↪ If the book is unavailable or out of stock, the total order value (including shipping fee) will be refunded to your account within 2 business days.

Additional Information

Description

இந்த நூலில் தமிழ்நாட்டு மக்களிடம் ஐரோப்பியர்கள் கண்ட நோய்களும், மருத்துவ முறையும், மருத்துவமனைகளும் (1550-1857) நன்கு விளக்கப்பட்டுள்ளன. பூச்சிக்கடி. வண்டுக்கடி. தேள்கடி, நாய்க்கடி மற்றும் நச்சு பற்றிய ஐரோப்பியர்கள் ஆய்வும். நோய்களைக் குணமாக்கும் தமிழர் மருந்துகளும் (1700-1848) பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. பாம்புக்கடிக்குத் தமிழர் மருந்துகளும், மருத்துவ முறைகளும் ஐரோப்பியர்கள் நடத்திய ஆய்வுகளும் (1701-1853) எவ்வாறு நிகழ்ந்தன என்று தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் குழுமத்தின் பெரியம்மை நோய்த் தடுப்பூசித் திட்டம் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள் (1800-1828) பற்றி விரிவாக எடுத்துக்கூறுகின்றன. அகத்தியர் இரண்டாயிரம் என்ற தமிழ் மருத்துவச் சுவடியை பாதிரியார் குருண்லர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தது (1710-1712), தஞ்சாவூர் மன்னர் அரண்மனை தன்வந்திரி மகால் மருத்துவமனையில் நோய்களுக்காக நடத்திய மருத்துவப் புதுமை ஆய்வுகள், மருத்துவ முறை மற்றும் மருந்துகள் (1827-1830) பற்றியும் விரிவாக அலசப்பட்டுள்ளன. இராமலிங்க அடிகள் (வள்ளலார்) கண்ட மூலிகை மருந்துகளும், நோய்களும் (1868-1873), தமிழர் மருத்துவச் செய்திப் பரிமாற்றம் மூலம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்ட அறிவு வளர்ச்சி (1688-1855) பற்றியும் ஆராயப்பட்டுள்ளன.

முன் அட்டைப்படம்: தமிழக சித்த மருத்துவர்கள். பெர்லின் அருங்காட்சியகம், எண். 15039 (1)

You may also like

Recently viewed