Description
ஐம்பெருங் காப்பியங்களில் தனித்துவமானது சீவக சிந்தாமணி. ஜீவகன் எனும் வீரமும் அழகும் நிரம்பிய வாலிபனின் வாழ்க்கைப் பயணத்தை இந்தக் காப்பியம் காட்சிப்படுத்துகிறது.
ஜீவகனின் வாழ்க்கை சோதனைகளும் சவால்களும் கொண்டாட்டங்களும் நிறைந்தது. தான் இழந்த ஆட்சியைக் கைப்பற்றச் செல்லும் ஜீவகன், தனது பயணத்தில் எட்டு அழகிய நங்கையர்களைச் சந்திக்கிறான். காதலில் விழுகிறான். வாலிப விளையாட்டுகளில் திளைக்கிறான். ஒரு கட்டத்தில் ஞானம் பெற்றுச் சமணத் துறவியாகிறான்.
ஜீவகனின் பயணத்தை இந்தப் புத்தகம் காவியச்சுவை மாறாமல், அற்புதமான மொழியில், எளிமையான நடையில், நாவலைப் போலச் சொல்லிச் செல்கிறது. இந்தப் பயணம் ஜீவகனுக்கு மட்டுமல்ல, இப்புத்தகத்தைப் படிப்பவர்களுக்கும் வாழ்வின் அர்த்தத்தைப் போதிக்கும்.
நாவல் வடிவில் சிலப்பதிகாரம், நாவல் வடிவில் மணிமேகலை நூல்களைத் தொடர்ந்து இந்த நூலையும் சிறப்புற எழுதி இருக்கிறார் சத்தியப்பிரியன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.