Description
குடும்பம் குடும்பமாகவும் பலவயதுக் குழுக்களாகவும் திரையரங்குக்குச் சென்ற காலம் இனி இல்லை. சந்தை நாள், திருவிழா நாள், விசேச நாள் என்பவை திரைப்படம் பார்ப்பதற்கானவையாக இருந்தது போய் விடுமுறை நாட்கள் என்னும் நிலை உருவாகிவிட்டது. சாவகாசமாகப் படம் பார்த்து அசை போடும் காலமும் இல்லை. திரளாகப் படம் பார்க்கும் அனுபவம் தகர்ந்து தனிமனித அந்தரங்கமாகப் படம் பார்ப்பதும் மாறிவருகிறதோ எனத் தோன்றுகின்றது. எனினும் வாழ்வில் திரைப்படத்திற்கான இடம் இன்னும் பெருமளவில் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் திரைப்படம் பார்த்தல் தொடர்பாகத் தேர்ந்தெடுத்துப் பேசிய என் அனுபவங்கள் பதிவு, சுயசரிதம், அபிப்ராயங்கள் எல்லாம் கலந்த கலவையாக இந்நூலில் அமைந்திருக்கின்றன.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.