Description
சங்ககாலத்தில் இருந்து வழி தவறி தற்காலத்துக்கு வந்துவிட்ட ஒரு புறநானூற்றுத் தமிழ்க் கவிஞன்தான் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் என்று நான் அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம். இதற்குக் காரணம் தமிழ் அழகியலைச் சுவாசிக்கும் இவரது கவிதை மொழிதலின் சுயம்…
இவரது கவிதைகள் தமிழ் மக்களின் கௌரவமான சமாதானத்தையும், புணர் நிர்மாணத்தையும் எப்போதும் கனவு கண்டபடி வாசகனிடம் பேசுபவை. இலங்கையில் சிங்கள பேரினவாதத்திற்கு எதிரான கலகக் குரலும் ஓங்கி ஒலித்த ஒரு காலகட்டத்தில் உருவாகத் தொடங்கிய வ.ஐ.ச ஜெயபாலனின் கவிதைப் பிரதிகள் ஈழப் போரின் வரலாற்று ரீதியான ஒரு கவிதைக் குரலாக இன்னும் தொடர்கின்றன.
இன்றைக்குத் தமிழ்த் திரை உலகில் ஒரு நடிகராக இவர் அடையாளம் காணப்பட்டபோதிலும், வ.ஐ.ச ஜெயபாலன் டிஜிட்டல் யுகத்திலும் தமிழ் அடையாளத்தைக் கட்டமைக்கும் ஈழத்தின் மிக முக்கியமான ஒரு கவிதைக் குரல் என்றே நான் சொல்வேன்.
– இந்திரன், கலை இலக்கிய விமர்சகர்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.